திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏர்வாடி கோயில் வாசல் தெருவை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண் ஆரல்வாய்மொழியில் இருக்கும் கல்லூரியில் பிஏ இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார்.
இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கின்ற ஐயப்பன் என்ற இளைஞருக்கு இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவறுகளுடைய காதலுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனவே, ஐஸ்வர்யா தனது காதலனிடம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதற்கு ஐயப்பன் மறுப்பு தெரிவித்த காரணத்தால் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.