” எட்டு போடும் நபருக்கு நோய் எட்டி போகும் ” என்ற பழமொழி இருக்கிறது. மனிதனின் உடல் அவரவரின் கை அளவுக்கு உள்ள எண்ஜான் அளவு மட்டுமே இருக்கும். நமது வீட்டில் உள்ள காலி இடமான மாடி அல்லது வீட்டின் பின்புறத்தில் 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி செவ்வக இடத்தில், தெற்கு வடக்காக குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் 8 நம்பரை போல பார்வைக்கு குறித்துக்கொண்டு காலை மற்றும் மாலை வடக்கு நோக்கி 8 வடிவத்தில் நடைப்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறாக முதலில் மேல்புறத்தில் இருந்து ஆரம்பித்து 21 நிமிடமும், பின்னர் கீழ் புறத்தில் இருந்து ஆரம்பித்து 21 நிமிடமும் நடக்க வேண்டும். மிதமான வேகத்தில் நடைப்பயிற்சியை செய்து வர வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் மார்பு சளி பிரச்சனை சரியாகுதல், இரத்த ஓட்டம் சமன், நீரிழிவு நோய் கட்டுக்குள் வருதல், குளிரினால் ஏற்படும் தலைவலி பிரச்சனை சரியாதல், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகுதல், கண்பார்வை அதிகரித்தல், குடல் இறக்க நோய் ஏற்படும் அபாயம் குறைதல், பாத வலி மற்றும் மூட்டு வலி பிரச்சனை சரியாகுதல், சுவாசம் போன்ற பிரச்சனை சரியாகுதல் போன்ற பல உடல்நல ஆரோக்கியம் கிடைக்கும்.
இது போன்று 8 க்குள் நடைப்பயிற்சி செய்தால் மூட்டு வலி சரியாகிறது, சர்க்கரை நோயால் ஏற்படும் உள்ளங்கால் எரிச்சல் பிரச்சனை சரியாகும், தொடை பகுதி பலமாகும், ஆண்மைகுறைபாடு, விதைப்பை குறைபாடு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் குறைபாடு, கர்ப்பப்பை குறைபாடு, மாதவிடாய் கோளாறு, தம்பதிகளுக்குள் இல்லறம் நாட்டமில்லாதது போன்ற பிரச்சனை சரியாகும்.
வயிறு சம்பந்தமான நோய்கள், இரத்த அழுத்த பிரச்சனை, இதய நோய், ஆஸ்துமா, உடல் எடை பிரச்சனை போன்றவை சரியாகும். தொண்டை பகுதியில் ஏற்படும் பிரச்சனை, அடிக்கடி ஏற்படும் கழுத்து பிடிப்பு பிரச்சனை போன்றவையும் சரியாகும்.