அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்ற நிலையில், அவரது மனைவி மெளனியா ட்ரம்ப், அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்திவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ட்ரம்பின் மனைவி அவருக்கு மூன்றாவது மனைவியாக இருக்கும் நிலையில், இருவருக்கும் 25 வயது வித்தியாசம் இருக்கிறது.
ட்ரம்பிற்கும் – மெளனியாவிக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்ப் வெளியேறிய பின்னர், அவரை மெளனியா ட்ரம்ப் விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ” ட்ரம்ப் – மெளனியா தம்பதியின் மகன் பேரனிற்கு சொத்தில் சமபங்கு வழங்க மெளனியா பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த தம்பதியின் 15 வருட திருமண பந்தம் முடித்துவிட்டதும் என்றும், இதனால் அவர் பதவியில் இருந்து விலகியதும் மெளனியா விவாகரத்து செய்வார் ” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது குசேலன் பட வடிவேல் காமெடியை நியாபகப்படுத்துகிறது. ரஜினியுடன் போட்டோ எடுத்தால் தான் நமக்குள் போடப்பட்ட கதவு திறக்கப்படும் என்பதை போல, அதிபராக இருந்தால் மட்டுமே கணவராக ஏற்றுக்கொள்வேன், தோல்வியுற்றால் விவகாரத்து தான் என மெளனியா கூறியிருக்கலாம்.
மேலைநாடுகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையில் இதுவும் ஒன்று. ஒருவரை பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து செய்து, மற்றொருவரை இருபாலரும் துணையாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அவர்களின் வழிவந்த பிள்ளைகளின் மனதில் இரத்தவழி தந்தைக்கென பாசம் இருக்கும். அந்த பாசத்தை வெளிப்படுத்தமுடியாமலும், சொந்த தந்தை / தாயை சந்திக்க இயலாமலும் தவிக்கும் குழந்தைகள் இன்றளவு ஏராளம்.
மேலும், ட்ரம்பின் குடும்ப வட்டாரத்தில் இருந்து வரும் தகவலை பொறுத்த வரையில், இருவரும் விவாகரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்றும், ட்ரம்பின் நிர்வாகத்தை திட்டமிட்டு வீழ்த்தி அதிபர் பதவியில் இருந்து அகற்றியது போதாதென்று, தற்போது குடும்பத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்த பலரும் திட்டமிட்டு பேசி வருவதாக தெரிவிக்கின்றனர்.