காமெடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள பிஸ்கோத் திரைப்படத்தை இயக்குனர் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாகியிருக்கிறது.
இதனால் இந்த படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாகுபலி படத்தை கலாய்க்கும் வகையிலும், கட்டப்பாவை வறுத்தெடுக்கும் வகையிலும் இருந்தது.
மேலும், இந்த படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளதும், பல காமெடி நட்சத்திரங்களின் கூட்டம் நடித்திருப்பதும், படத்தின் வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் ரவீந்திரன் கைப்பற்றியுள்ளார்.
திரையரங்கு திறக்க நாட்கள் ஆகும் என்பதால், ஓ.டி.டி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்டு இருப்பதாக வெளியானது. இந்நிலையில், தற்போது திரையரங்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திரைப்படம் திரையரங்கில் வரும் தீப ஒளி தினத்தன்று வெளியாகவுள்ளது.
#Biskoth to bring back your happiness this Diwali!
Let’s celebrate it with fun-filled & a complete laughter riot😉 Grand release by @tridentartsoffl on Nov 14#BiskothDiwali💥 #BiskothFromNov14@iamsanthanam @Dir_kannanR @radhanmusic @MasalaPix @mkrpproductions @johnsoncinepro pic.twitter.com/YzbLoxAdSg— Trident Arts (@tridentartsoffl) November 10, 2020