நாம் வீட்டில் இரவு உறங்கிவிட்டு காலை எழுந்ததும், நாம் படுத்திருந்த பாய் மற்றும் தலையணை, போர்வை போன்றவற்றை மடித்து ஓரமாக வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அல்லது நமது பாட்டி / தாத்தா போன்றோர் கூறியதை நாம் கேட்டிருப்போம். எதற்காக அவர்கள் இதனை கூறுகிறார்கள் என்று இனி அறிந்துகொள்ளலாம்.
அன்றைய காலங்களில் ஏன் இன்றளவும் கூட தம்பதி அல்லது தனிமனிதர் உறங்க தனியாக பெட்ரூம் பெரும்பாலான இடங்களில் கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருசேரவே உறங்கியிருப்போம். அதிக நேரத்தில் ஒரே இடத்தில் உறங்குவதால், அவரின் ஒளி உடலின் தன்மை இருக்கும். காட்டு விலங்குகளுக்கு இதனை உணரும் சக்தி அதிகம்.
மனிதன் ஓரிடத்தில் இருந்து சிறுது தூரம் சென்றுவிட்ட பின்னரும், மனிதன் இவ்வழியாக சென்றுள்ளான் என்பதை காட்டுவிலங்குகள் அறிந்துகொள்ளும். நமது உடலின் வாசனை போன்றவற்றையும் வைத்து, உடலின் அதிர்வுகளை அறிந்துகொண்டு விலங்குகள் இதனை உணர்ந்துகொள்கிறது.
நாம் படுக்கையை மடித்து வைக்காமல் இருந்தால், அதன் மீது ஏறியே அனைவரும் செல்வோம். அதிலேயே மீண்டும் சுத்தம் செய்யாமல் படுத்துகொண்டாள் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் கேடு ஏற்படும். தேவையில்லாத பிரச்சனை ஏற்படுவது போன்று தோன்றி, தூக்கம் கலைந்துவிடும்.
இதனை எளிதாக கூறவேண்டும் என்றால் நாம் புதிய இடங்களுக்கு செல்கையில் களைப்பாக இருந்தாலும், உறங்கும் நேரத்தில் தூக்கம் வராமல் தவித்திருப்போம். பின்னர் சில நாட்கள் கழித்து நாம் இயல்பாக உறங்குவோம். நாம் வழக்கமாக உறங்கிய இடத்தின் ஒளியும், தற்போது சென்றுள்ள இடத்தின் ஒளியும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக தூக்கமின்மை ஏற்படுகிறது.
இது போன்று உள்ள சின்னச்சின்ன காரணங்களால் நமது உடல்நலமும், மனநலமும் பாதிக்கிறது. இதனாலேயே ஒருவரின் உடையை உடுத்த வேண்டாம் என்றும், ஒருவரின் படுக்கையை விரித்து மற்றொருவர் படுக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். தற்போது கட்டில், மெத்தை பழக்கமானது பெரும்பாலானோருக்கு பழகிவிட்டது. அந்த கட்டிலோ அல்லது மெத்தையோ துவக்கத்தில் தூக்கத்தை தந்திருக்காது. சில நாட்கள் கழித்தே நாம் நன்றாக உறங்கியிருப்போம்.