நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மக்களின் உணவு பழக்க வழக்கம் அன்றாடம் மாறிவருகிறது. பல்வேறு நேரங்களில் மோசமான உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக தேவையற்ற நோய்கள் வந்து சேருகின்றன. பலரையும் அச்சுறுத்தும் நோயாக தற்போது இதய நோய்கள் இருக்கின்றன. எங்குபார்த்தாலும் மாரடைப்பு இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் என்று சிறுவயதிலேயே உயிர் இழப்பு ஏற்படுகின்றது. இதய நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் சிலவற்றை தற்போது காணலாம்.
சர்க்கரை நோய்:
மாரடைப்பு ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இரத்தத்தில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான சர்க்கரை மாரடைப்பை ஏற்பட வைக்கிறது.
ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு: இது மிக மோசமான வியாதிகளில் ஒன்று இரத்தத்தில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான அழுத்தம் காரணமாக இதய நோய்கள் வந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இதுபோல ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உருவாகிறது.
புகைபிடித்தல்: இன்று பெரும்பாலும் பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சி இன்மை:
ஆரோக்கியமில்லாத உணவுகளை சாப்பிடுவதால் இதய நோய்கள் உருவாகி மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அது போல உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.