குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ..!!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

முதல் சீசன் போட்டியாளர்களாக பிக் பாஸ் வனிதா, மோகன் வைத்தியா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டானர்.

இதில் முதல் சீசனின் தலைப்பை தட்டி சென்றவர் பிக் பாஸ் வனிதா விஜயகுமார். சீசன் 1 வெற்றிக்கு பிறகு தற்போது இரண்டாம் சீசன் 2 துவங்கியுள்ளது.

அதற்கான போட்டியாளர்களின் பட்டியலை ஏற்கனவே விஜய் டிவி வெளியிட்டிருந்தது. ஆம் நடிகை ஷகீலா, சீரியல் நடிகர் தர்ஷா, மதுரை முத்து, பாபா பாஸ்கர் உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.