விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்து ஒரு சீரியல் ஈரமான ரோஜாவே.
ஆம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முன்னணி சீரியல்களில் ஒன்றாகவும் TRPயில் நம்பர் ஒன் சிரியலாகவும் விளங்கி வருகிறது.
இந்த தொடரில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை பவித்ரா நடித்த வருகிறார். இவர் இந்த சீரியலுக்கு முன்பு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
இது போட்டோஷூட் புகைப்படங்கள் என்றாலும் திருமண கோலத்தில் பவித்ரா இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றே முடிவு செய்துவிட்டனர்.
ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை, அது வெறும் திருமண கோலத்தில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தான் என்று அதன்பின் ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.
இதோ அந்த புகைப்படங்கள்…