வசதியான வாழ்க்கை பிடிக்கவில்லையென கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கோரியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பிறப்பிலேயே கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த வவுனியாவை சேர்ந்த பெண் அவரது சிறுவயதிலேயே ஆடம்பரத்தை விரும்புவதில்லையாம், மிகவும் எளிமையாக வாழக்கூடியவராம்.
கார்கள் இருந்தும், சைக்கிளில்தான் பாடசாலை, மாலை வகுப்புகளுக்கு சக மாணவிகளுடன் சென்று வருவாராம், இப்படி எளிமையை விரும்பிய பெண்ணிற்கு 24 வயதில் 2009-ம் ஆண்டு கொழும்பிலுள்ள கோடீஸ்வர இளைஞரை திருமணம் செய்துவைத்தனர் பெற்றோர்.
திருமணத்திற்குப்பின் கொழும்பில் கணவருடன் வசித்து வந்த பெண்ணுக்கு கொழும்பு வாழ்க்கை பிடிக்கவில்லை, அங்கே ஆடம்பரங்கள் மத்தியில் தன்னந்தனியே வாழ்வதாக உணர்ந்து, தன் கணவரிடம் எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை வவுனியாவில் ஒரு பண்ணை வீடு உள்ளது அங்கே சென்று சிம்பிளாக வாழலாம் என வலியுறுத்தி வந்துள்ளார்.
கணவனோ குறித்த பெண்ணின் வேண்டுகோளை கணக்கிலெடுக்காமல் தன் வேலையை பார்த்து வந்துள்ளார், இதனால் கோபமடைந்த வவுனியா பெண் விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.