கட்டுக்கொடி இலையால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடலுக்கு பல நன்மைகளை செய்யும் இலைகளில், கட்டுக்கொடி இலை மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்த இலையை நாம் எடுத்துக்கொண்டு வந்தால், நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காணலாம்.

கட்டுக்கொடி உடலுக்கு குளிர்ச்சியை தரும். உமிழ்நீரை அதிகரிக்கும். கட்டுக்கொடி இலையை சிறிதளவு உண்டு வந்தால் சீதபேதி மற்றும் மூலக்கடுப்பு நோய் குணமாகும். கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்தை சேர்த்து காலை, மாலை சாபோய்ட்டு வந்தால் நீரிழிவு நோய் சரியாகும், அதீத களைப்பு மற்றும் தாகம், தேக எரிச்சல் பிரச்சனை குணமாகும்.

கட்டுக்கொடி இலையுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தயிரை கலந்து பெண்களுக்கு கொடுத்தால் பெரும்பாடு தீரும். கட்டுக்கொடி இலையை சிறிதளவு சர்க்கரையுடன் சேர்த்து, அதனை காய வைத்து வரும் பசைபோன்ற ஜெல்லை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை, சீத கழிச்சல் குணமாகும். விந்து காட்டும். மூலநோய் சரியாகி, ஆண்மை பெருகும். உடற்சூடு குறையும்.

கட்டுக்கொடி இலையை காயவைத்து பொடியாக்கி காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் உதிரப்போக்கு சரியாகும். விந்து முந்துதல், நீர்த்துப்போன விந்துவை சரி செய்தல், தம்பதிகளுக்குள் பாலுணர்வை அதிகரித்தல் போன்ற நன்மையையும் செய்கிறது.