தியேட்டரை அதிரவைத்த மாஸ்டர் டீசர்.!!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் டீசர் ரசிகர்களுக்கு விருந்தாக தீபாவளி அன்று வெளியானது. வெளியாகி இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசரை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்துள்ளனர். மாஸ்டர் டீசரை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் கூட்டம்கூட்டமாய் சென்றுள்ளனர்.

அந்த வீடியோவை தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.