மாஸ்டர் டீசரில் ஏன் இவர்களை காட்டவில்லை.!!

விஜய் மற்றும் வீஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

தளபதி விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளி விருந்தாக வெளியானது.

இந்த டீசரில் பல விதமான புதுமையான விஷயங்களை காண முடிந்தது. அதை போல் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள சில முக்கியான கதாபாத்திரங்களும் இதில் இடம்பெறவில்லை.

ஆம் நடிகை ஆண்ட்ரியா, மாஸ்டர் மஹேந்திரன், விஜய்யின் கார், விஜய்யின் கையில் இருந்த பூனை என எதிர்பார்க்கப்பட்ட சில கதாபாத்திரங்கள், விஷயங்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இதனை குறித்து வெளியான தகவல்களில், மாஸ்டர் படத்தின் சஸ்பென்ஸுக்காக இவர்களை டீசரில் காட்டவில்லை என்று கூறுகின்றனர்.