முதன் முறையாக இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா..!!

ஒரு நடிகை 10 வருடங்கள் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவிட்டாலே, அது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். முதன் முறையாக அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்கவைத்தார்.

ஹீரோக்களுடன் இணைந்து கதாநாயகியாக ஒரு புறம் நடித்து வந்தாலும், சோலோ ஹீரோயினாகவும் மற்றொரு புறம் கலக்கிக்கொண்டு வருகிறார். ஆம் அறம், டோரா, ஐரா, கோலமாவு கோகிலா மற்றும் கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களை உதாரணமாக கூறலாம்.

ஆனால், இதில் சில படங்கள் வெற்றியடைந்தாலும், பல படங்கள் மண்ணை கவ்வியுள்ளது. இருந்தாலும் சோலோ ஹீரோயினாக நடிப்பதை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார்.

இந்நிலையில் இவர் நடித்துவரும் சோலோ ஹீரோயின் கதையில், முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள மூன்று வேடமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சஸ்பென்சாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.