66 வயதில் முன்னணி நடிகர்களை மிஞ்சிய நடிகர் சரத்குமார்..!!!

தமிழ் சினிமா 90ஸ் களில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வானம் கொட்டட்டும். இப்படத்தில் தனது மனைவியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து நடித்திருந்தார்.

மேலும் தற்போது பொன்னியின் செல்வன் { படம் } மற்றும் birds of prey { வெப் சீரிஸ் } உள்ளிட்டவைகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 66 வயதாகும் நடிகர் சரத்குமார் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஜிம் ஒர்கவுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ” இவருக்கு வயசே ஆகாதா ” என்று கூறி வருகின்றனர்.