பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நாயகன் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அதன்பிறகு அவர்கள் போடும் உழைப்பு தான் ஜெயிக்க வைக்கிறது.
அப்படி நடிகர்கள் பலர் அப்பா பிரபலமாக இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்க கடுமையாக கஷ்டப்பட்டுள்ளார்கள். இயக்குனரும், நடிகருமான கங்கை அமரனும் தனது மகன் வெங்கட் பிரபுவை நாயகன் ஆக்க ஆசைப்பட்டுள்ளார்.
அவரே ஒரு கதை எழுதி அதில் அவரை நடிக்க வைத்துள்ளார். வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடித்துள்ளார், படத்திற்கு பூஞ்சோலை என்றும் பெயர் வைத்திருக்கின்றனர்.
ஆனால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது, படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.