அடுத்தடுத்து வந்த போன் கால்! பிக்பாஸ் கஸ்தூரியின் முக்கிய முடிவு!

நடிகை கஸ்தூரி என்றாலே சமூக வலைதளத்தில் சிறு பரபரப்பு இருக்கத்தான் செய்கிறது. அவரின் அரசியல் விமர்சனங்களும், எதிர்கட்சியினருக்கு அவர் அளித்த பதிலடிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் அவருக்கு தொடர்ந்து போன் கால் வந்துள்ளதாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறீர்கள் என்று தகவல். உண்மை தானா? என்று வினவினார்களாம்.

ஆனால் அவர் அதை மறுப்பு தெரிவித்ததுடன் முகநூலில் விளக்கமளித்துள்ளார். இதில் அவர் எந்த கட்சியாக இருந்தாலும் தவறை விமர்சிக்கிறேன், தயங்கியதில்லை. அனைத்து கட்சிகளிலும் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் நான் அவசரப்படவில்லை. அரசியல் என்றால் மக்கள் சேவை, மகளிர் உரிமைக்காக போராடுவது தான்.

கட்சியில் இணைந்து கோடி கோடியாக பணம் சுருட்டுவது அல்ல. அரசியலுக்க நான் லாயக்கா என பரிசோதிக்கிறேன். திராவிட பகுத்தறிவு கட்சியினின் கொச்சையான தாக்குதல்களை சிந்திக்கும் போது வதந்தியை உண்மையாக்கி விடலாமா என தோன்றுகிறது என கூறியுள்ளார்.