தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி பல வருடங்களாக பேச்சு வாரத்தை இணையத்தில் ஊடகங்களில் மூலம் போய்க்கொண்டு தான் இருக்கிறது.
ஆம் நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா ஆகிய நடிகைகளை சிம்பு காதலித்து வந்தார். இதில் ஹன்சிகாவுடன் இவருக்கு ஏறக்குறைய திருமணம் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் இவர்களின் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதில் சமீபத்தில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்திரரிடம் பத்திரிகையாளர்கள் சிம்புவுக்கு வரன் பார்க்க துவங்கிவிடீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த டி. ராஜேந்தர் ” சிம்புக்கு நான் நிறைய பெண் பார்த்துவிட்டேன், இனிமேல் அந்த ஈஸ்வரன் தான் சிம்புவுக்கு நல்ல வரன் தரவேண்டும். அப்படி நடந்தால் 2021 நல்லது நடக்கும் ” என்று கூறியுள்ளார்.
இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் த்ரிஷாவுடன் தான் சிம்புவுக்கு கல்யாணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.