நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சலா?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குகள் அறிவிக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளிப்போனது.

தற்போது தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் வயது முதிர்வு மற்றும் ஏற்கெனவே அவருக்கு செய்யப்பட்டிருக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக தள்ளிப்போனதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

தற்போது இத்தகவல் வதந்தி என விளக்கமளித்திருக்கும் அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ், யாரோ விஷமிகள் இதுபோன்ற தகவலை கிளப்பி விட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்