200 படங்கள், 500 பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் மரணம்!

கொரோனாவிலிருந்து தற்போது தான் தளர்வுகளுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதை மக்களால் உணரமுடிகிறது. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் சினிமா வட்டாரத்தை சேர்ந்த சிலர் காலமாகினர்.

அண்மையில் பாடகர் எஸ்.பி.பி. காலமானது பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பழம் பெரும் பாடலாசிரியர் குமார தேவன் மாரடைப்பால் காலமாகியுள்ள செய்தி சினிமா வட்டாரத்தை சோகமாக்கியுள்ளது.

200 படங்களில் 500 பாடல்களுக்கு மேல் எழுதிய அவர் பொள்ளாச்சி அருகில் வடுகபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 88 வயதான நிலையில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க என்ற அவரின் சூப்பர் ஹிட் பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார். யானை பாகன் படத்தில் அவர் எழுதிய பதினாறும் நிறையாத பருவ மங்கை பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியுள்ளார்.

வாழ்க்கைக்கான பல விசயங்கள் அடங்கிய தத்துவ பாடல்களை கொடுத்தவர் குடும்பத்தை விட்டு பிரிந்ததால் அவரின் மனைவி லட்சுமி, மகள்கள் விஜய வெங்கடேஸ்வரி, சுபத்ரா தேவி ஆகியோர் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.