சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக்பாஸ் வருகிறாரா, எப்போது?

பிக்பாஸ் 4வது சீசனில் ஆரம்பத்தில் சில போட்டியாளர்களுடன் சண்டையில் ஈடுபட்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. முதலில் ஆரம்பித்ததே அனிதாவுடன் தான்.

பின் அடுத்தடுத்து சில போட்டியாளர்களுடன் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

சில நாட்களுக்கு பிறகு அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தார்.

இந்த நிலையில் தான் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார், ரசிகர்கள் அதனை வரவேற்கவில்லை. அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருக்கிறார் என்ற செய்திகள் வர அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டுள்ளது.

அவரோ என்னை ஏன் கேட்கிறீர்கள், இதை நீங்கள் பிக்பாஸிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.