லட்ச லட்சமாக அள்ளிய நயன் தாரா!

மூக்குத்தி அம்மனாக அனைவரின் மனதிலும் நச்சென பதிந்துவிட்டார் நடிகை நயன்தாரா. போலி சாமியார்களுக்கு தோலுரிக்கும் விதமாகவும், இயற்கையை அழிக்கும் பேர்வழிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாகவும் இப்படம் காமெடியுடன் கலந்து அனைவரையும் ஈர்த்துவிட்டது.

அடுத்தாக அவரின் நெற்றிக்கண் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. விக்னேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். அவள் படத்தின் இயக்குனர் மிலிந்த் இப்படத்தை எடுத்துள்ளார்.

நயன்தாரா பார்வை திறன் சவாலுள்ளவராக நடித்துள்ளார். அண்மையில் இதன் டீசர் வெளியானது. தற்போது 4 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.