கடலை மிட்டாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து ரசித்து சாப்பிடும் ஒரு பொருளாக கடலை மிட்டாய் உள்ளது.

பாதாம் பிஸ்தா முந்திரி பருப்பு இருக்கின்ற சத்துக்களை விட நிலக்கடலையில் பல்வேறு சத்துக்களும் நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆற்றலும் உள்ளது என சொல்லப்படுகின்றது.

நிலக்கடையில் உள்ள கார்போஹைட்ரேட், நார்சத்து, நல்ல கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புசத்து, கால்சியம், துத்தநாகம், மங்கனீசு சத்து, பாஸ்பிரஸ் சத்து, பொட்டாசிய சத்து நமது உடலுக்கு தேவையான ஒன்றாகும்.

கடலையும், வெள்ளமும் சேரும் போது புரதம், இரும்பு சத்து, செலினியம் போன்ற பல சத்துக்கள் மற்றும் தாது பொருட்களை நமது உடல் பெறுகிறது.

அந்தவகையில் கடலை மிட்டாயை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. தசைகளின் வலிமையை அதிகரிக்கும்.
  • உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கும். வைட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை சரி செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கடலை மிட்டாய்களை அதிகளவு கொடுக்கலாம்.
  • நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குறையும். நிலக்கடலையில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் போலிக் அமிலம் இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
  • இறைச்சி உணவுகளுக்கு இணையான சத்துக்கள் நிலக்கடலையில் உள்ளது. மூளையை உற்சாகப்படுத்தும் அமினோ அமிலம், மூளை நரம்பை தூண்டும் செர்டோன், மன அழுத்தத்தை குறைகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் நிலக்கடலை அல்லது கடலை மிட்டாயை சாப்பிட்டு வந்தால் கருப்பை சீராக செயல்படும். கருப்பை நீர்கட்டிகள் குறையும். கருவின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு வளர்ச்சியை சிறப்பித்து கொடுக்கும். இளமையை பராமரிக்க உதவுகிறது.
  • பெண்கள் நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால், எலும்புகள் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.
  • ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சினையை சரி செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குறைகிறது. இரத்த ஓட்டத்தினை சீர்படுத்துகிறது.