நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.
3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி டிசம்பர் 18ம் திகதி தொடங்கவுள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருந்த படி பயிற்சி மேற்கொண்ட வந்த நிலையில், அந்த அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதியானதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது
கிறிஸ்ட்சர்ச்சில் தனிமைப்படுத்தலில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதியானதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
தற்போது ஆறு பேரும் சுய-தனிமைப்படுத்தலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் மற்றும் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது பயிற்சி மேற்கொள்ள பாகிஸ்தான் அணிக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.