குழந்தையை கையில் வைத்து கொண்டே கணவருடன் பீர் குடிக்கும் நடிகை..

தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாகி வரும் சூழல் இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக மாறி வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி.

அந்தவகையில் தற்போதைய பிக் பாஸ் சீசன் 4 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகிறார் மாடல் மற்றும் நடிகையுமான சம்யுக்தா.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆம் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒளிபரப்பான சந்திரகுமாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குழந்தையை தன் ஒரு கையில் ஏந்தியபடி, மற்றொரு கையில் மதுவுடன் இருக்கிறார் சம்யுக்தா.

பிக் பாஸ் சம்யுக்தா தனது கணவர் கார்த்திக்குடன் இணைந்து மது அருந்தும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் கடும் விமர்சனத்தை சம்யுக்தா மீது கூறி வருகின்றனர்.