பெரும்பாலும் சினிமாவில் வெள்ளையாக இருக்கும் நடிகைகளைத்தான் தற்போது தேர்வு செய்து வருவது வழக்கமாகிவிட்டது. அதற்காக வேற்றுமொழி பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் குவிக்கப்படுகிறார்கள்.
அந்தவகையில் தொலைக்காட்சி தொடர்களுக்கும் தமிழ் சின்னத்திரையில் இப்படியாக நடந்து வருகிறது. மொழி தெரியாமல் டப்பிங் குரல் கொடுத்து நடிக்க வைத்துவிடலாம் என்று இயக்குநர்களும் நினைப்பதால் தமிழ் நடிகைகள் அதுவும் கருப்பாக கலையாக இருக்கும் நடிகைகள் வருத்தப்படுகிறார்கள்.
அப்படி வருத்தப்பட்டு புளம்பி வருகிறார் நம்ம பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ரா (முல்லை). சமீப காலமாக தமிழ் சீரியல்களில் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள் அதிக அளவில் நடித்து வருகின்றனர். இதுகுறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார்.
பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, என வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் சீரியல்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.
நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர் தான் ஆனால் இதுவும் அழகு தானே. நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்குற பெண்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என தெரிவியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே தமிழ் நடிகைகளின் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்று கோபமாக பேசியுள்ளார்.