வெள்ளை முழுக்களை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி தான் கொய்யா இலை.
இதை பயன்படுத்தி ஒரே மாதத்திற்குள் தலை முடியை கருமையாக மாற்றி விடலாம்.
எப்படி இது சாத்தியம் ஆகும் என்பதையும், இதனை எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.
ஒரு இலையில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளதென்றால், அந்த இலையில் பலவித சத்துக்கள் உள்ளது என்று அர்த்தம்.
கொய்யா இலையில் வைட்டமின் சி, நீர்சத்து, நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் போன்ற பல தாதுக்கள் நிரம்பி உள்ளதாம். இது தான் கொய்யாவின் முழு சத்திற்கும் காரணம்.
இனி வெள்ளை முடியை போக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை 5
- கறிவேப்பில்லை இலை 20
- நெல்லி 1
- தேங்காய் எண்ணெய் 200 மி.லி
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெய்யை வாணலில் ஊற்றி அதில் கருவேப்பிலை, கொய்யா இலை, நறுக்கிய நெல்லிக்காய் முதலியவற்றை சேர்க்கவும்.
மிதமான சூட்டில் இவை முழுவதுமாக வறுபடும் வரை வதக்கி கொண்டு, அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கலவை குளிர்ந்த பிறகு இதனை வடிகட்டி வாரத்திற்கு 1 முறை இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் காணாமல் போய் விடும்.