சினிமாவில் வார்சு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது பல சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சுருதி ஹாசன்.
பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து பெரியளவில் இடம் பிடித்தார். இதையடுத்து பாலிவுட், டோலிவுட் என சென்று நடித்து வருகிறார் சுருதி.
இந்நிலையில் கொரானா லாக்டவுன் சமயத்தில் படங்கள் இல்லாமல் இருந்து கஷ்டப்பட்ட நிலையில் தற்போது வெப்சீரிஸ் படங்களில் நடிக்கவும் தயாராகியிருக்கிறார்.
தற்போது, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னை விட 9 வயது குறைவான அறிமுக நடிகர் ஒருவருடன் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப் சீரிஸில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் நிறையவே இருக்கிறதாம்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பணத்திற்காக இப்படியுமா? அதுவுன் உன் வயசு என்ன அந்த பையன் சைசு என்ன என்று கலாய்த்து வருகிறார்கள்.