கட்சியில் இணைந்த இந்தியன் பட நடிகை!

2021ன் சட்ட மன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில் நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தார்.

இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வந்த இந்தியன் படத்தில் நடித்த ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஊர்மிளா கடந்த 2019 ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து பின் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது.