தமிழ் திரையுலகில் தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக சுற்றிக் கொண்டிருக்கும் நயன்தாரா ஒரு காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி திணறிக் கொண்டிருந்தார்.
அதனால்தானோ என்னவோ தற்போதெல்லாம் அம்மணி பேட்டி கூட கொடுப்பதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நயன் அளித்த பேட்டியில் ஆர்யா போட்ட பிரியாணியை விட சிம்பு போட்ட பிரியாணி சிறப்பாக இருந்ததாக கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதாவது நயன்தாராவும் ஆர்யாவும் கேரள பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால் ராஜா ராணி படம் முழுக்க ஆப் ஸ்கிரீனில் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தார்களாம். இதனால் இருவரிடையேயும் நெருங்கிய உறவு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகளும் பரவின.
ஒரு நாள் ஆர்யா நயன்தாராவை வீட்டிற்கே கூட்டிட்டு போய் அவரது கையாலே பிரியாணி சமைத்து நயன்தாராவிற்கு கொடுத்தாராம்.
மேலும் இது பற்றி நயனிடம் ‘யாரோட பிரியாணி உங்களுக்கு பிடித்தது’ என பேட்டியில் கேட்ட போது, ‘ஆர்யா தான் ஃபர்ஸ்ட் எனக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்தார். ஆனா அதற்க்கு முன்பு சிம்பு போட்ட பிரியாணியை என்னால மறக்கவே முடியாது செம்மையா இருந்துச்சு’ என்று கூறியிருக்கிறார் நயன்.
அப்போது நயன் பேட்டியளித்த வீடியோ தற்போது ரசிகர்கள் அதிக அளவில் விமர்சித்து வருகின்றனர்.