திரைப்படங்களுக்கு குவியும் பார்வையாளர்கள், பாலிவுட்டில் தல அஜித்திற்கு பெருகும் ரசிகர் பட்டாளம்..!

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியாகும் தல அஜித்தின் திரைப்படங்களுக்கு மில்லியன் கணக்கிலான வியூஸ்கள் குவிந்து வருகிறது.

இதனால் பில்லா, வீரம், வரலாறு, என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.