நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி.. !

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக கடந்த 15 வருடமாக விளங்கி வருபவர் நடிகை வித்யா பாலன்.

இவர் சமீபத்தில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக சில நிமிடங்கள் மட்டும் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை மந்திரி விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த விருந்து அழைப்பை, மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் வித்யா பாலன் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டதாம். மேலும் நடிகை வித்யா பாலன் அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.