பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இதன் கதையை தாண்டி சீரியல் நாயகன்-நாயகிக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
அவர்களை இணைந்து இருக்கும் படி நிறைய வீடியோக்களை ரசிகர்கள் உருவாக்கி டிரண்டாக்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் செம்பருத்தி சீரியலில் இருந்து கதை நாயகன் ஆதி விலக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் ஆதி இல்லையென்றால் சீரியலை முடித்துவிடுங்கள், வேறொரு நாயகன் வைத்தால் நன்றாக இருக்காது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த சீரியலில் நடித்த ஜனனி அண்மையில் ஆதியை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.