திருநம்பியாக தன்னை அறிவித்துக்கொண்ட பிரபல நடிகை..!

ஜூனோ என்ற படத்தில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகை, தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

கனடா நாட்டை பூர்விகமாகக் கொண்ட நடிகை எலன் பேட்ஜ். இவர் ஜூனோ, இன்செப்சன், டூ ரோம் வித் லவ் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் வருடத்தில் தன்னை ஓரினசேர்கையாளராக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னைப்போல உள்ள எம்மா என்ற பெண்ணையும் மணந்துள்ளார். இந்நிலையில், எல்.ஜி.பி.டி சமூகத்துடன் இணைந்து அவர்களுக்காக உரிமை குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது நான் திருநம்பியாக மாறிவிட்டேன் என்றும், தனது பெயர் எலியட் பேட்ஜ் என்று மாற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.