ஆஸ்திரேலிய மண்ணில் கலக்கிய தமிழன் நடராஜன்! சாதித்தது எப்படி?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி தற்போது கான்பெராவில் நடந்து வருகிறது.

இந்திய அணியின் பேட்டிங் இந்த முறையும் சொதப்பி வருகிறது. இந்திய அணியில் இன்று மயங்க், சைனி, சாஹல், சமி ஆகியோர் அணியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர், சுப்மான் கில், குல்தீப்.. மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர் நடராஜனுக்கு இது முதல் சர்வதேச போட்டியாகும்.

இதையடுத்து, 303 ரன்களை குவித்த இந்திய அணி. அதன்பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து, இந்தியாவுக்காக பும்ராவும், நடராஜனும் பந்து வீசினர்.

கடந்த இரண்டு ஆட்டங்களாக முதல் 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்தாமல் இருந்தனர் இந்திய பவுலர்கள்.

அதற்கு தீர்வு கொடுக்கும் விதமாக இந்தப் போட்டியில் ஆறாவது ஓவரில் லபுஷேன் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்.

சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட் இது. தொடர்ந்தும் அபாரமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

மேலும், பலரும் நடராஜனுக்கு வாழ்த்துக்களை கூறியதோடு, விக்கெட் எடுத்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.