உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளதா?

பொதுவாக ஒரு நாளைக்கு ஒருவர் அதிகளவு சிறுநீர் கழிப்பது நல்லது தான் என்று பலரும் கூறுவார்கள்.

உண்மையில் ஒருவர் ஒரு நாளைக்கு 8-10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேரிட்டாலோ அல்லது இன்னும் மிகக்குறுகிய இடைவெளியில் சிறுநீர் கழித்தாலோ அது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஏனெனில் ஒருவர் ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழிப்பது என்பது குறிப்பிட்ட சில மோசமான நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

இதனால் எந்த ஒரு இடத்திற்கும் செல்ல முடியாமல் போவதோடு, சில சமயங்களில் இந்த பிரச்சனை சங்கடத்தையும் உண்டாக்கும்

எனவே உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட நாம் எடுத்து கொள்ளும் சில உணவுகள் கூட காரணமாக அமைகின்றது என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஃபுரூட் போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் இருப்பதனால், சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை பாதிக்கும். ஆகவே இந்த வகை பழங்களைத் தவிர்த்திடுங்கள்.
  • தக்காளி ஒரு அசிட்டிக் உணவு. இது சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டி, OAB அறிகுறிகளை மோசமாக்கும். குறிப்பாக சென்சிடிவ்வானவர்கள் தக்காளியை மட்டுமின்றி, தக்காளி தயாரிப்புக்களான தக்காளி சாஸ், பிட்சா சாஸ், கெட்சப் மற்றும் சல்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
  • ஆல்கஹால் சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டக்கூடியவை. இது சிறுநீர்ப்பை நிரம்பியுள்ளது என்பதை மூளைக்கு தெரிவிக்கும் சிக்னல்களை சீர்குலைக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை ஆல்கஹாலையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
  • காற்றூட்டப்பட்ட கார்போனேட்டட் பானங்கள் சிறுநீர்ப்பை பிரச்சனைகளை மோசமாக்கும். ஆகவே இந்த வகை பானங்களை அறவே தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால், நிலைமை மோசமாக்கி விடும்.
  • காபி மற்றும் டீயில் உள்ள காப்ஃபைன், சிறுநீர்ப்பை செயல்பாட்டை அதிகரித்து, OAB-யின் அறிகுறிகளை தீவிரமாக வழிவகுக்கும். ஆகவே காப்ஃபைன் நிறைந்த பானங்களான காபி, டீ போன்றவற்றைக் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
  • சாக்லேட்டிலும்சிறிது காப்ஃபைன் உள்ளது. எனவே வழக்கமான சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, காப்ஃபைன் இல்லாத வெள்ளை சாக்லேட்டை சாப்பிடுங்கள்.
  • மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் போன்ற காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் முன், எது உங்களை பாதிக்கிறது, எது உங்களை பாதிக்கவில்லை என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சுவைக்காகவும், பாதுகாப்புக்காகவும் சேர்க்கும் செயற்கை சுவையூட்டிகள் அதிகம் இருக்கின்றன. இவை சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யும் மற்றும் OAB அறிகுறிகளை மோசமாக்கும்.
  • வெங்காயம் சிறுநீர்ப்பை பிரச்சனைகளை உண்டாக்கும் மற்றும் அடிக்கடி சிறுநீரைக் கழிக்கத் தூண்டும். முக்கியமாக வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் தான் நிலைமை மோசமாகும்.
  • கிரான்பெர்ரி பழங்கள் அசிட்டிக் தன்மை கொண்டதால் சிறுநீர்ப்பையை எரிச்சலூட்டி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். ஆகவே இந்த பழ ஜூஸ் குடிக்க வேண்டாம்.