உங்கள் வாழ்க்கையில் இந்த பாவங்களை மட்டும் ஒருபோதும் செய்துவிடாதீங்க….

பொதுவாக நாம் அனைவருமே வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவங்களை செய்திருக்கலாம்.

இதில் தெரிந்து செய்யும் பாவங்களுக்கு தண்டனை உண்டு என்பது நமக்கு பல புராணங்கள் எடுத்துக் கூறுகிறது.

இருந்தாலும் அதை பற்றிய அக்கறை நாம் கொள்வதில்லை. உண்மையில் தெரிந்தே பாவம் செய்தவர்களுக்கு ஆன்மீக அடிப்படையில் கிடைக்கும் தண்டனை என்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு சிலர் எல்லாம் சக மனிதனை மனிதனாக பார்ப்பதில்லை. தனக்கு என்னவோ ஒரு கொம்பு முளைத்தது போல் அலட்டிக் கொள்வார்கள். ஒரு மனிதனை தரக்குறைவாக நடத்தும் இன்னொரு மனிதன் இறுதியில் மோட்சம் பெறுவதில்லை. அதே தவறை அவன் செய்தால் நல்ல படியாகவும், அடுத்தவன் செய்தால் அவனை தீய சொற்களால் வஞ்சிப்பதும் வாடிக்கையாக வைத்திருப்பான். ஆணவமும், திமிரும் கொண்ட இது போன்றவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்பது தான் உண்மை.
  • பிறர் பொருட்களின் மீதும், உறவுகளின் மீதும் விருப்பம் கொள்கிறவன் நரகத்தில் இடமில்லாமல் நாயாய், பேயாய் அலைவான் என்பது தெய்வ சட்டத்தில் எழுதப்பட்டது.
  • ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவோ பாடுபடுகிறார்கள். அதை சுலபமாக பறித்து செல்பவர்கள் எந்த காரணத்தை கூறினாலும் அது மிகப்பெரிய பாவமாக கூறப்படுகிறது.
  • பிறருடைய மனைவி மேல் அல்லது கணவன் மேல் ஆசைப்படுபவர்களுக்குமோட்சம் என்பதே கிடையாதாம்.
  • வாழும் காலத்தில் இல்லாத பாவம் எல்லாம் செய்துவிட்டு, வாழ்நாளின் இறுதி காலகட்டத்தில் கடவுளே! என்று கடவுளை சரணாகதி அடைபவர்களுக்கு மோட்சம் என்பது கிடையாது.