மூன்றாம் தலைமுறை! அந்த ஒரு பார்வை! தாத்தாவும், பேரனுமாக – நெகிழ்ச்சியில் அப்பா – அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம் இதோ

நடிகர் விஜய குமார் தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை பிடித்தவர். கிராமத்து மண் சார்ந்த கதைகளின் வாயிலாக அவரின் நடிப்பும் கதாபாத்திரமும் இன்னும் நம் மனதில் இருக்கிறது.

உதாரணத்திற்கு நட்புக்காக படம். நாட்டாமையாக நடித்த அவரின் கதாபாத்திரம் மனதில் வாழ்கிறது. மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம் டா என பாடல் இன்னும் நம் நினைவில்..

தற்போது அவரின் மகன் அருண் விஜய்யும் ஒரு மகனாக, நடிகராக சினிமாவில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். அடுத்த தலைமுறையாக அருண் விஜய்யின் மகன் அர்னவ் வளர்ந்து வருகிறார். இவரும் சினிமாவில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்…

இப்படியிருக்க எல்லா வழிகளிலும் அர்னவை அப்ப வழி நடத்துக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என கூறியுள்ளார். தாத்தாவும், பேரப்பிள்ளையும் ஒரே மாதிரியான பனியன் அணிந்து நேர் பார்வை பார்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.