உண்மையிலேயே நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கு என்ன ஆச்சு?

நடிகர் சூர்யாவின் தந்தையான சிவக்குமார் கடந்த ஒரு வாரகாலமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதன் பின் அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.

ஒரு சில திரைப்பிரபலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தன்னை சென்னை தியாகராய நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது குறித்து சிவக்குமார் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கம் கொடுக்கப்படவில்லை.