சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் தான் சூரரைப் போற்று. கடந்த நவம்பர் 12ம் தேதி இப்படம் பிரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படத்தை முதல் நாள் மட்டுமே 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அப்படி திரையரங்கில் வெளியாகி இருந்தால் இந்த விவரம் படி படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதுநாள் வரை படத்தை 110 மில்லியன் பேர் பார்த்துள்ளார்களாம். நான்கு வாரத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 120 ரூ என்று வைத்துப் பார்த்தால் படம் ரூ. 1320 கோடி வசூல் செய்திருக்கும்.
பாகுபலி பட வசூலை எல்லாம் சூர்யாவின் சூரரைப் போற்று ஓரங்கட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.