தமிழகத்தில் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சம்சு- சல்மா சுல்தானா(வயது 25).
இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற குழந்தை உள்ளது, சம்சு தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்து வருகிறார்.
சுகனுக்கு கண்பார்வை கோளாறு இருப்பதால், கணவன்- மனைவி இடையே குழந்தையை கவனிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவும் இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த சல்மா சுல்தானா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.