பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்யுக்தா விஜய் சேதுபதியின் படத்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் சம்யுக்தா புகழை தேடி கொண்டார்.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகளினால் வெளியேற்றப்பட்டார்.
வெளியே வந்த வேகத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதாவது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம் சம்யுக்தா. அவர் நடிக்கும் பாத்திரத்திற்கான படப்பிடிப்பு கூட நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ராஷி கன்னா ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். மேலும் பார்த்திபன், கருணாகரன், ராஜ், பக்ஸ் பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். விரைவில் முழு படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.