தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி. இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் ஆனது.
மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நைனிகா.
இவர் பிரபல நடிகையான மீனாவின் மகள், எப்படி நடிகை மீனா ரஜினியின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானரோ, அதே போல் அவரின் மகளும் விஜயின் படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தெறி பேபி நைனிகாவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் நன்றாக வளர்த்துள்ளார்.
தெறி படம் வெளியாகி 4 வருடங்களே ஆகியுள்ள நிலையில் அவர் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.