புதிய சீரியலுக்காக சூப்பர் ஹிட் சீரியலை முடித்த விஜய் டிவி..!!

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் TRPயில் கொடிகட்டி பறந்துள்ளது. ஆம் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, சின்னத்தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ், உள்ளிட்ட பல சீரியல்களை உதாரணமாக கூறலாம்.

அதில் ஒன்றாக தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.

சமீபத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு விஜய் டிவியின் முன்னணி சீரியல்களான ஆயுத எழுத்து, மௌன ராகம் உள்ளிட்ட சீரியல் முடிவு செய்யப்பட்டன.

அந்த வகையில் தற்போது பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலும் முடிவுக்கு வந்துள்ளது. ஆம் இதனை அந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் புத்தம் புதிய சிரியலான, வேலைக்காரன் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.