தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியல் பற்றி ஏதவது வசங்களை தனது படங்களில் பேசிவிட்டால், அவரை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துவிடும்.
அப்படி தளபதி விஜய்யின் மேல் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் பற்றிய பேச்சு போய்க்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அரசியல் குறித்தான பேச்சுக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை விஜய்.
மேலும் சமீபத்தில் நடிகை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற போகிறேன் என்று பெரும் பரபரப்பை கிளப்பினார். ஆனால் எந்த வேகத்தில் எழுந்தாரோ, அதே வேகத்தில் அமைதியாகிவிட்டார் எஸ்.ஏ.சி.
இந்நிலையில் தளபதி விஜய் குறித்து சமீபத்தில் அவரது நண்பருடன், நடிகருமான தாடி பாலாஜி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதோ அவர் கூறியது : “ தளபதி விஜய்க்கு என ஆயுளில் இருந்து பாதியை தருகிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும், பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்க வேண்டும்.
ஆனால் எக்காரணத்திற்கு காகவும் அரசியல் பக்கம் சென்று விட வேண்டும். சட்டசபை பற்றி நினைக்காதீர்கள். உங்கள் ரசிகர்கள் தான் உங்களின் சட்டசபை, அதில் நீங்கள் எப்போதும், முதலமைச்சர் தான் “ என்று அதிரடியாக கூறியுள்ளார் தாடி பாலாஜி.