பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு போட்டியாளர்கள் சிறப்பான போட்டிபோட்டு வருகிறார்கள்.
பல டாஸ்க்களால் போட்டியாளர்களுக்குள்ளே சண்டை பாசம் எழ ஆரம்பித்தாலும் சிலரின் கடுமையான வார்த்தைகள் எமோஷனலாக பாதித்து வருகிறது.
அந்தவகையில் இன்றைய போட்டியில் ரோபோட் மனிதர்கள் டாஸ்க்கில் அர்ச்சனா ரோபோட்டின் தலைவியாக இருந்ந்த நிலையில், மனிதர்களான நிஷா அவரை எமோஷ்னலாகவும் சிரிக்கவும் அழ வைக்கவும் முற்பட்டார்.
இதை பயன்படுத்திய அரந்தாங்கி நிஷா அர்ச்சனாவின் தந்தை இறப்பை பற்றி பேசி அவரை கடுமையாக உசுப்பேற்றியுள்ளார். அதற்கு பிறகு நிஷா அதுபற்றி கவலைப்பட்டு தனியே சென்று அழுதுள்ளார். அதற்கு சற்றும் செவிக்கொடுக்காமல் இருந்து ரோபோட் வேலையை மட்டும் செய்தார் அர்ச்சனா.
டாஸ்க் கடுமையாக நடந்து முடிந்த நிலையில் அர்ச்சனா நான் அழவில்லை சிரிக்கவும் இல்லை என்று கூறி கதறி அழுது இது டாஸ்க்காக என் தந்தையின் மரணத்தை பற்றி எமோஷ்னலாக பேசினால் நான் எப்படி கோபப்படுவேன் என்று கேள்வி கேட்டும் கத்தியுள்ளார்.
நிஷா இது வெறும் டாஸ்க் நான் தவறாக அப்பாவை பற்றி பேசவில்லையே என்று விவாதத்தை வைத்தார். ஒரு தந்தையின் மரணத்தை பற்றி பேசுவது டாஸ்க்கா என்று அர்ச்சனா மேலும் மேலும் கூறி கதறி அழுதுள்ளார். தற்போது இது ரசிகர்களை மிகவும் பாதித்து நிஷாவின் மேல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.