நடிகர் ஜெயம் ரவியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்துடன் இதோ.

ஜெயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் முன்னணி நடிகர் ஜெயம் ரவி.

இதன்பின் இவர் நடிப்பில் வெளியான எம்.குமரன், சண் ஆப் மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை உள்ளிட்ட படங்கள் ஜெயம் ரவியை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்திற்கு பிறகு பூமி திரைப்படம் தற்போது வெளியாக காத்திருக்கிறது. இதுமட்டுமின்றி ஜனகனமான, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..