2 நபரில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் போட்டியாளர்..

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் பிக் பாஸ் வீட்டை விட்டு ஒவ்வொரு போட்டியாளர்களும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறுவார்.

ஆனால் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன் போட்டுடைத்தார்.

அதன்படி இன்று சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் சோமசேகர் மற்றும் ரமேஷ் இருவரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று கமல் ஹாசன் கூறிவிட்டு சென்றவுடன் 2 நபர்களில் முதல் போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜித்தன் ரமேஷ்.

மேலும் நாளை ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு எபிசோடில் நிஷா வெளியேறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.