நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில், பல பெண்களுடன் கலந்து கொண்டார். அதில், இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்சியில் தேர்ச்சி பெற்று இறுதியில் வெற்றி பெற்றவர் நடிகை அபர்ணதி.
View this post on Instagram
இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆர்யாவை உருகி உருகி காதலித்த அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் இறுதிவரை போராடினார். ஆர்யாவை நீ, வா, போ என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு ஆர்யாவிடம் அவர் மிக நெருக்கமாக இருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. இருப்பினும், நிகழ்ச்சியின் முடிவில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எந்த பெண்ணையும் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. இது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஆர்யாவுக்கு மிகவும் பிடித்த பெண் நான்தான் என்று அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
View this post on Instagram
இருப்பினும் ஆர்யா அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் மிகுந்த சோகத்தோடு இருந்த நிலையில் ,ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் எந்தவிதமான வழிகளையும் வெளிப்படுத்தாத அபர்னதி திரைத்துறையில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
எப்படியாவது ஹீரோயினாக ஆகிவிட வேண்டும் என்று அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டிகளை நடத்தி ரசிகர்களின் பார்வைக்கு அளிப்பார். தற்போது கேசரி நிற உடை ஒன்றை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றது.