மாஸான அப்டேட்டை கொடுத்த யுவன்.!

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள அதிரடி த்ரில்லர் படம்தான் வலிமை. இதில் நடிகர் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் இசையில் வெளியாக இருக்கும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், பல்வேறு நடிகர்களின் படங்கள் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து, அஜித் ரசிகர்களும் தல படம் குறித்த அப்டேட்டை வேண்டி படக்குழுவினருக்கு இணையத்தில் கோரிக்கை வைத்தனர்.

அஜித்தின் படங்கள் முன்பு போல காதல் காட்சிகள், அதிரடி போன்றவற்றை விட கருத்து சொல்வதாக தான் இருக்கும் என்று அவரே தெரிவித்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த நேர்கொண்டபார்வை படம் கூட அப்படித்தான் இருந்தது.

இருப்பினும் அவரது அனைத்து வகையான படங்களையும் காண ரசிகர்கள் தயாராக தான் உள்ளனர். தற்போது வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.


அவர் தீவிரமாக பணியாற்றுவது போல அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு அவர் வலிமை என்று குறிப்பிட்டு இருக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது போஸ்ட் உள்ளது.