பிக்பாஸ் கேட்ட ஒற்றை வார்த்தையால் கதறி அழுத ஷிவானி – ரியோ….

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 70 நாட்களை கடந்து போட்டியாளர்களிடையே விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில், ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, இந்த வார நாமினேஷனில் 7 பேர் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். அந்த ஓபன் நாமினேஷனலில், ஷிவானி 4 ஓட்டுகளுடனும், ரியோ, அனிதா மற்றும் அர்ச்சனா தலா 3 ஓட்டுகளுடனும், ஆரி, ஆஜித், சோம் ஆகிய 3 பேர் தலா 2 ஓட்டுகளுடனும் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து பிக்பாஸ் கன்பெஷன் அறைக்கு ஷிவானியை அழைத்து 70 நாட்கள் உங்கள் அனுபவத்தை பற்றி கேட்டார்.

அதற்கு, ஷிவானியும் ஸ்கூல் பிள்ளைங்க போல கதறி கதறி அழுது விளக்கத்தை கொடுக்க, பிக்பாஸும் ஷிவானி நீங்க அழுதாலும் அழகா இருக்கீங்க என ஆறுதல் கூறி அடுத்த போட்டியாளரை அழைத்தார்.

அடுத்த, போட்டியாளரான, ரியோவும் உள்ளே வர, அவரிடம் வெளியே யார மிஸ் பண்றீங்க என கேட்க அதற்கு ரியோவும் கண்கலங்கி மனைவி நண்பர்களை கூறினார்.

மேலும், பிக்பாஸ் ஒரு படி மேலே சென்று அவரிம் மகளை பற்றி கேட்டதாக சொல்ல ரியோ உடனே அழுகை நிறுத்தாமல் அழுது நன்றி தெரிவித்தார். குறிப்பிட்ட காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்…